தூத்துக்குடி மாநகராட்சி தமிழகத்தில் 2வது இடம் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
தமிழகத்தில் தூத்துக்குடி மாநகராட்சி 2வது இடம் பிடித்துள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடியில் மாநகராட்சி சார்பில் மண்டல வாரியாக வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்து வருகிறது. இன்று மேற்கு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தலைமையில் முகாம் நடைபெற்றது. துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி கோட்டூராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கலந்துகொண்ட மாநகராட்சி ஜெகன் பெரியசாமி பேசியதாவது "தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளில் தூத்துக்குடி மாநகராட்சி கடந்த 2023-24 ஆம் ஆண்டு சிறப்பான முறையில் பணியாற்றியதாகவும் சுகாதாரப் பணிகள், சாலை வசதிகள் சிறப்பாக செய்து கொடுக்கப்டப்டுள்ளது. இதனை பாராட்டும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி தமிழகத்தில் இரண்டாவது மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட உள்ளது.
நாளை சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதினை வழங்குகிறார். இவ்விருதை மேயர் ஆகிய நானும், ஆணையரும் இணைந்து பெற்றுக் கொள்கிறோம். தூத்துக்குடி மாநகராட்சியில் மண்டல வாரியாக இதுவரை 5 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் பெறப்பட்ட 663 மனுக்களுக்கு 510 மனுக்கள் தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளது என்று மேயர் தெரிவித்தார். பின்னர் அவர் மக்களிடம் மனுக்களை பெற்றார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர் ராஜாராம், துணை மாநகர பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் டாக்டர் வினோத் ராஜா, மண்டல ஆணையர் சுரேஷ்குமார், சுகாதார ஆய்வாளர் ஸ்டான்லி பாக்கியநாதன், மாநகராட்சி கவுன்சிலர்கள் பொன்னப்பன், இசக்கி ராஜா, சுரேஷ்குமார், சந்திரபோஸ், சரவணகுமார், கந்தையா, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரை மணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் ஜேஸ்பர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.