தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் முற்றுகையிட்டு மதியேந்தி போராட்டம்!
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம்!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பு ஆட்சியர் அலுவலகம் உள்ளே போராட்டம் நடத்த காவல்துறை அனுமதிக்காததை தொடர்ந்து சத்துணவு ஊழியர்கள் மற்றும் காவல்துறை இடையே தள்ளுமுள்ளு பரபரப்பு காவல்துறை தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள்.
கடந்த 2019 திமுக ஆட்சி காலத்தில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி சென்னை கோட்டையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 28 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர் இந்த நாளை ஆண்டுதோறும் சத்துணவு ஊழியர்கள் எழுச்சி நாளாக கடைபிடித்து வருகின்றனர்
இதை அடுத்து இன்று மாலை தமிழ்நாடு அரசு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியரிடம் வழங்க வேண்டும் குடும்ப பாதுகாப்பு உடன் கூடிய ஓய்வூதியம் ரூபாய் 9000 வழங்க வேண்டும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு மடியேந்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஆட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான சத்துணவு ஊழியர்கள் குவிந்தனர்
ஆனால் காவல்துறையினர் சத்துண ஊழியர்களை ஆட்சியர் அலுவலகம் உள்ளே போராட்டம் நடத்த அனுமதி மறுத்தனர் இதைத் தொடர்ந்து காவல்துறையினரின் அனுமதியை மற்றும் தடையை மீறி சத்துணவு ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றனர் இதன் காரணமாக காவல்துறையினர் மற்றும் சத்துணவு ஊழியர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதை அடுத்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கான சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜெயபாக்கியம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் ஆனந்தசெல்வம், பெருமாள், அன்னம்மாள், பாஸ்கர், இணை செயலாளர்கள் மரியநேசம், மோகனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் பொன்னரசி வரவேற்று பேசினார். மாநில துணைத்தலைவர் தமிழரசன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் செல்லத்துரை கோரிக்கையை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் என்.வெங்கடேசன் நிறைவுரையாற்றினார். போராட்டத்தில் திரளான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாவட்ட பொருளாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.