திருவைகுண்டம் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., த.வெ.கவில் ஐக்கியம் : வாழ்த்துக்கூறி வரவேற்ற விஜய்!!

திருவைகுண்டம் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., த.வெ.கவில் ஐக்கியம் : வாழ்த்துக்கூறி வரவேற்ற விஜய்!!

திருவைகுண்டம் முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வின்  தி.மு.க.விலிருந்து விலகி த.வெ.க.வில் இணைந்துள்ளார். 

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் முன்னிலையில் முன்னாள் சட்டசபை உறுப்பினர்கள் அக்கட்சியில் இணைந்துள்ளனர். இதன்படி தி.மு.க.,வைச் சேர்ந்த ஶ்ரீவைகுண்டம் முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வன், அ.தி.மு.க., வைச் சேர்ந்த வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் ஶ்ரீதரன், ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை டாக்டர் மரிய வில்சன், மயிலாப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜலட்சுமி, முன்னாள் நீதிபதி சுபாஷ் ஆகியோர் த.வெ.கவில் இணைந்தனர்.

ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ், அதிகாரி அருண்ராஜ் இன்று த.வெ.கவில் இணைந்தார். அவர் த.வெ.க.வின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியினர் புதிய பொறுப்பாளருக்கு முழு ஒத்துழைப்பை நல்கி, வரும் சட்டசபை தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

--------------------------------------------------

உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள‌...

WHATSAPP GROUP LINK 1 :- CLICK HERE

WHATSAPP GROUP LINK 2 :- CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL CLICK HERE :-

GOOGLE NEWS LINK :- CLICK HERE