தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வரவில்லை என்றால் கெடுதல்: பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் பரபரப்பு பேட்டி.!

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வரவில்லை என்றால் கெடுதல்: பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் பரபரப்பு பேட்டி.!

கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார்..

 

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்

, 2026 மிகப்பெரிய மாற்றம் வரும். போதையை ஒழிக்க வைகோ பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். ஆனால் அதனை விற்பதே கூட்டணியில் இருக்கக்கூடியவர்கள் தான். போதையை ஒழிக்க வேண்டும் என்றால அறிவாலயத்தை நோக்கி தான் பாதையாத்திரை செல்ல வேண்டும்.. காங்கிரஸ் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறியுள்ளார் இது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு? ஜோதிமணி கூறிய கருத்து ஒப்புதல் வாக்குமூலம். வைகோவின் பாதயாத்திரையை காங்கிரஸ் புறக்கணித்துள்ளது.. திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஆரம்பமாகிவிட்டது.  ஏனென்றால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி தமிழகத்தில் கடன் அதிகமாகிவிட்டது என்று கூறுகின்றார்... ஆனால் சிதம்பரம் கூறியது தான் ஆச்சரியமாக இருந்தது. மாநில கடனை வைத்து மதிப்பிடக்கூடாது என்கின்றார். தமிழ்நாடு கடன் ஒன்பதரை லட்சம் 27% தாண்டி எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. ஒருவர் தலையில் ஒன்னே முக்கால் லட்சம் கடன்  இருக்கிறது. 

திருநெல்வேலி மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு மூன்று வருடமாகிறது. இன்னும் கொலையாளிகளை  கண்டுபிடிக்கவில்லை.. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு பாஜக காரர்களை சோறு தான் திங்குகீறீர்களா என்று கூறியுள்ளார்.. சேகர் பாபுவிற்கு எச்சரிக்கை,.. கோவில் உங்களுக்கு சொந்தமில்லை. 2026 நாங்கள் காத்திருக்கின்றோம்.. கோவில் வாசலில் நின்று எப்படி பேசலாம். யார் அதிகாரம் கொடுத்தது? சர்சு, மசூதி  வாசல்களில் இவ்வாறு நிற்பீர்களா?  2026 தேர்தலில் இதற்கான விடையை பார்க்க தான் போகின்றீர்கள்.. திருச்செந்தூர் முருகன் கோவில் பக்தர்களுக்கு வசதி செய்து கொடுக்க முடியவில்லை 2026 தேர்தலில் மாற்றம் ஏற்படும்..  அமித்ஷா தமிழகம் வர இருக்கின்றார்.. அதன் பின்பு சக்தியை நீங்கள் பார்க்க தான் போகின்றீர்கள். அசுர சக்தியோட தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறப் போகிறது..

அடிமை கூட்டணி என்று திமுக கூட்டணியினர் கூறுகின்றனர்.. ஆனால் அடித்து நொறுக்க கூடிய கூட்டணி. போதையே இல்லை என்று அப்பாவு கூறுகின்றார் அவர் வீட்டு முன்பு போய் பாருங்கள்.. முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் திராவிட மாடல் அரசு. அதிமுக பிஜேபி அசுர சக்தி தான். 21 மாநிலங்களில் ஆட்சி செய்து வர கூடிய கூட்டணி பிஜேபி. விஜய் வலுவாக இருக்கிறார் ஏன்றால் அனுமானத்தில் கூறியிருக்கின்றீர்கள்... நாங்கள் சதவீதத்தின் அடிப்படையில் பலமாக இருக்கிறோம்.. கூட்டணிக்கு விஜய் வரவில்லை என்றால் அவருக்குத்தான் கெடுதல் என்றார்..