தூத்துக்குடி சிவன் கோவிலில் சுவாமி - அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் ரத வீதி உலா
தூத்துக்குடி சிவன் கோவிலில் சுவாமி - அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் ரத வீதி உலா..
தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா முதல் நாளான இன்று சுவாமி - அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் ரத வீதி உலா நடைபெற்றது.
தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழா தொடர்ந்து மே 3ஆம் தேதி வரை நடைபெறும். இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும். தினசரி சுவாமி, அம்பாள் சப்பர வீதி உலா நடைபெறும்.
இந்நிலையில், சித்திரை பெருந்திருவிழா முதல் நாளான இன்று இரவு சுவாமி அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் பஞ்சமூர்த்திகளுடன் ரத வீதி உலா நடைபெற்றது. ஏழாம் திருநாளான 30 ஆம் தேதி சாமி அம்பாள் சிவப்பு சாத்து அலங்காரத்திலும், இரவு வெள்ளை சாத்து அலங்காரத்தில் சப்பர வீதிஉலா வரும் நிகழ்ச்சியும், எட்டாம் திருநாளன்று பச்சை சாத்தி அலங்காரத்தில் சுவாமி அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். கிகர நிகழ்ச்சியான தேரோட்டம் மே 3ஆம் தேதி நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.