தென் தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடலில் பலத்த காற்று வீசும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தென் தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடலில் பலத்த காற்று வீசும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தென் தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடலில் பலத்த காற்று வீசும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு : மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில், மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் பல மாவட்டங்களில் 10 முதல் 20 செமீ வரை மிக கனமழை பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும், தென் தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட நாட்டு படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்பிடித் துறைமுகத்தில் மீன்வளத்துறை அறிவித்து, நடுக்கடலில் மீன் பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பும் படி மீன்வளத்துறை வலியுறுத்தியது.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கடலுக்கு செல்லாமல் 265 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது