தனியார் நிறுவனத்தில் கேரள மாநில ஊழியர் திடீர் மரணம் - போலீஸ் விசாரணை..!

தனியார் நிறுவனத்தில் கேரள மாநில ஊழியர் திடீர் மரணம் - போலீஸ் விசாரணை..!

தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் ஊழியர் திடீரென மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் சுல்தான் மகன் மஜு (44). இவர் தூத்துக்குடி இபி காலனியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று பணியில் இருந்தபோது திடீரென இரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தாராம். 

இதையடுத்து அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) ராமலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.