தூத்துக்குடியில் 26ம் தேதி எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்: அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை!

தூத்துக்குடியில் மார்ச் 26ல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இது தொடர்பாக தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
நடைபெறுகிற நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முதல் கட்ட சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார் அதன் படி வருகிற மார்ச் 26 செவ்வாய்கிழமை அன்று மாலை 03.00 மணிக்கு தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் எம்.ஜி.ஆர் திடலில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இதுகுறித்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வைத்து மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாநில அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் இரா.ஹென்றி, மாவட்ட அமைப்புச் சாரா ஓட்டுநரணி செயலாளர் இரா.சுதாகர், ஒன்றியச் செயலாளர்கள், பகுதி கழகச் செயலாளர்கள் , சார்பு அணி செயலாளர்கள் ,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.