திருச்செந்தூர் கோவிலில் மின்சாரம் தாக்கி பக்தர் பலியான சம்பவத்தை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல்..!

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் மின்சாரம் தாக்கி பக்தர் பலியான சம்பவத்தில் கோவில் நிர்வாகத்தை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது போலீசாருக்கும், பாஜகவும் இருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ஜோதிபாஸ். இவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் 7 பேர் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். குடும்பத்துடன் கடலில் புனித நீராடி உள்ளனர். கடலில் புனித நீராடி விட்டு ஜோதிபாஸின் மகன் பிரசாத் (22) கோவில் புறக் காவல் நிலையம் முன்பு அமைக்கப்பட்ட மின் எர்த் பைப் அருகில் அமர்ந்த போது மின் கசிவு காரணமாக பிரசாத் மீது மின்சாரம் பாய்ந்தது யந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் கோவில் இணை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், உயிரிழந்த பிரசாத் குடும்பத்திற்கு நிவாரண வழங்க கோரியும், பாஜகவினர் திடீரென திருச்செந்தூர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தை கைவிடுமாறு தெரிவித்தனர். இதனால் பாஜகவில் இருக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பாஜகவினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் திருச்செந்தூர் நகர் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.