முத்தையாபுரத்தில் விடுதலை போராட்ட வீரர், தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு விழா மற்றும் புகழஞ்சலி கூட்டம் : மேயர் ஜெகன் பங்கேற்பு!

முத்தையாபுரத்தில் விடுதலை போராட்ட வீரர், தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு விழா மற்றும் புகழஞ்சலி கூட்டம் : மேயர் ஜெகன் பங்கேற்பு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளரும், விடுதலை போராட்ட வீரரும், தமிழக அரசு சார்பில் தகைசால் தமிழர் விருது பெற்ற மறைந்த தோழர் என். சங்கரய்யா உருவப்படம் திறப்பு விழா மற்றும் புகழஞ்சலி கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி புறநகர் குழு சார்பில் முத்தையாபுரம் பல்க் பஜாரில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு சிபி எம் புறநகர் செயலாளர் பா.ராஜா தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மற்றும் வணக்கத்திற்குரிய தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு தோழர் சங்கரய்யா படத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்வில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் பூ மயில், சிஐடியு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, விசிக மத்திய மாவட்ட செயலாளர் கணேசன், மதிமுக மாநில மீனவரணி துணை செயலாளர் நக்கீரன், காங்கிரஸ் மாநில பேச்சாளர் மஜித், தமிழக வாழ்வுரிமை கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், பச்சிராஜன், முத்துவேல், ராஜதுரை, சிபி எம் புறநகர் குழு உறுப்பினர்கள் பூ ராடன், முனியசாமி, வெள்ளைச்சாமி, டேனியல் ராஜ், சரஸ்வதி, சிவ பெருமாள், வீரப்பெருமாள், கிளைச் செயலாளர்கள் கே.காசிராஜன், அ.கிருஷ்ணபாண்டி, கே.எலியாஸ், கே.முருகன், எம்.முருகன், எம்பி.மகாராஜன், ஐபாஸ்கர், த.பேச்சிமுத்து, எம்.செல்வி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.