என்.டி.பி.எல் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்...சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

என்.டி.பி.எல் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்...சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

என்.டி.பி.எல் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்...சென்னையில் நடைபெற்ற  பேச்சுவார்த்தையில் உடன்பாடு!
என்.டி.பி.எல் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்...சென்னையில் நடைபெற்ற  பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு-(சிஐடியு) சார்பில் தூத்துக்குடி, என்டிபிஎல் அனல்மின் நிலைய (1000 மெகாவாட்) தொழி லாளர்கள்  பல்வேறு கோரிக்கைக ளை வலியுறுத்தி அனல்மின் நிலையம் முன்பு பிப்.13 முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டம் திங்கட்கிழமையுடன் (பிப்.20) 8-வது நாளை எட்டியுள்ளது. News first appeared @ www.tutyvision.com மேலும், 5 கட்டமாக நடத்தப் பட்ட பேச்சு வார்த்தை தோல்விய டையந்ததை அடுத்து 6ம் கட்ட பேச்சு வார்த்தையானது, திங்களன்று சென்னையில் முதன்மை துணை தலைமை தொழிலாளர் நலத்துறை அதிகாரி அருண்குமார் தலைமையில் நடைபெற்றது.

News first appeared @ www.tutyvision.com

அனைத்து தொழிலாளர்களுக்கும் 20 நாட்களுக்கு ஒரு நாள் என்ற அடிப்படையில் சம்பளத்துடன் கூடிய‌ விடுப்பு அனுமதிக்கப்படும், கொரோனா காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கும் உடனடியாக வேலை வழங்கப்படும், தேசிய விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறைக்காக இதுவரை வழங்கப்படாத பிஹெச் ஊதியம் தொழிலாளர்களைப் பொறுத்தவரை 6.10.2022 தேதியில் இருந்தும் சூப்பர்வைஸர்கள் மற்றும் பொறியாளர்களை பொருத்தவரை 1.1.2023 தேதியிலிருந்தும் வழங்கப்படும், மாதச் சம்பளம் ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதியோ அதற்கு முன்பாகவோ வழங்கப்படும்,                                        News first appeared @ www.tutyvision.com                                                                                                                 ஒப்பந்த தொழிலாளர்கள் குறைகளை களைய  குறை தீர்ப்பு குழு அமைக்கப்படும். அதில் சங்க பிரதிநிதி ஒருவரும் நியமிக்கப்படுவார், மாத ஊதியம் 21,000 ரூபாய்க்கு மேல் பெறக்கூடிய தொழிலாளர்கள் மற்றும் சூப்பர்வைசர்கள் பொறியாளர்களுக்கு போனஸ்க்கு பதிலாக கருணைத்தொகை வழங்குவது குறித்து உரிய நேரத்தில் பேசி தீர்வு காணப்படும், தொழிலாளர்களுக்கு ஊதிய மாற்றம் செய்வது தொடர்பான துல்லியமான கோரிக்கையை உடனடியாக தொழிற்சங்கம் கொடுக்க வேண்டும் என்எல்சி தலைமையகம் உட்பட அனைத்து தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி 75 நாட்களுக்குள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று உடன்பாடு ஏற்பட்டது . 

இதில் சிஐடியு சார்பில் மாநில பொதுச் செயலாளர் சுகுமாரன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில பொதுச்  செயலாளர் ராஜேந்திரன், சிஐடியு மாநில உதவி தலைவர் விஜயன், சிஐடியு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ரசல், News first appeared @ www.tutyvision.com என்.டி.பி.எல் அனல் மின் நிலைய திட்ட பொதுச் செயலாளர் அப்பாதுரை, என்.டி.பி.எல் அனல் மின் நிலைய தொழிற்சங்க நிர்வாகிகள் மணிகண்டன், பிரபாகரன், கொத்தாளீஸ்வரன், குனசீலன், பாலமுருகன் மற்றும் என்.டி.பி.எல் அனல் மின் நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

join with us.... https://chat.whatsapp.com/DzFjVCPWnCdHqP8BvonywQ