நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் குடற்புழு நீக்குதல் மருத்துவ முகாம்

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் குடற்புழு நீக்குதல் மருத்துவ முகாம்

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் குடற்புழு நீக்குதல் மருத்துவ முகாம் நடைபெற்றது.

தேசிய குடற்புழு நீக்குதல் நாளினை முன்னிட்டு, உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கொடுத்து முகாமினை துவக்கி வைத்தார்.உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் விஜயகுமார், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டு நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் ஆயிரம் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினர். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். அறிவியல் ஆசிரியரும் இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின்  பொறுப்பாளருமான ஜென்னிங்ஸ் காமராஜ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவ பணியாளர்களையும், குடற்புழு நீக்க மாத்திரைகளை பெற்றுக் கொண்ட மாணவர்களையும், நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர்களையும் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ், தாளாளர் சுதாகர், ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பாராட்டினார்.