தூத்துக்குடி சிவன் கோவில் பகுதியில் சாலை பணிகள் : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சிவன் கோயில் மற்றும் பெருமாள் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், தூத்துக்குடி மாநகரில் எல்லா பகுதிகளிலும் என்டு டு என்ட் என்ற முறையிலே பணிகள் நடைபெற்று வருகின்றது. அதுபோல இந்தப் பகுதியிலும் வேலை நடைபெற்றுள்ளது. மேலும் அப்பகுதி வியாபார பெருமக்கள் ஒரு பக்கமாக வாகனங்களை நிறுத்தி பொதுமக்கள் கோயிலுக்கு எந்தவித சிரமமின்றி எளிதாக சென்றுவர ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஏற்கனவே மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உயர் மின் விளக்குகள் அமைத்து வருகின்றேன். அது போல் ஒன்று அழகர் ஜவல்லர்ஸ் முன்பாக அமைத்து தருமாறு கேட்டுக் கொண்டார்கள். அதையும் வரும் நாட்களில் நிறைவேற்றி தருகிறேன் என்று உறுதியளித்தேன் என்று தெரிவித்தார். ஆய்வின்போது, மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், மாமன்ற உறுப்பினர் சுரேஷ் குமார், தலைமை கழக பேச்சாளர் சரத்பாலா, வட்ட செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.