தூத்துக்குடி மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ.25 லட்சம் பறிமுதல் : ஆட்சியர் தகவல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, 36.தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தேர்தல் நடத்தைவிதிகள மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்க்கு ஏதுவாக தூத்துக்குடி மாவட்டத்திற்க்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும், தொகுதி ஒன்றுக்கு 3 எண்ணிக்கையிலான பறக்கும் படைகள் வீதம் 3 சுழற்சியாக மொத்தம் 54 பறக்கும் படைகளும், அதேபோல் சட்டமன்ற தொகுதி ஒன்றுக்கு 3 எண்ணிக்கை வீதம் 3 சுழற்சியாக மொத்தம் 54 நிலையான கண்காணிப்பு குழுக்களும் இம்மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
C-VIGIL செயலி மூலம் 43, கட்டணமில்லா தொலைபேசி மூலம் 21, வாட்ஸ்அப் செயலி மூலம் 6 மற்றும் இணையதளம் வாயிலாக 44 என மொத்தம் 114 புகார் மனுக்கள் பெறப்பட்டு அவை அனைத்தும் முடிவு காணப்பட்டுள்ளன. இதற்கெனவே பிரத்யேக தேர்தல் கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (24X7) முழு நேரமும் செயல்பட்டு வருகிறது. தேர்தல் தொடர்பான புகார்களை1800-599-1960, 0461-2981900, 2981901, 2981902, 2981903 மற்றும் WHATSAPP NO.94864-54714 மூலம் தெரிவிக்கலாம்.
தேர்தல் நடத்தை விதிமீறல்களை தடுக்கவும், தேர்தல் நடத்தை விதிமீறல்களில் எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்படும் பணியிலும் இப்படைகள் செயல்பட்டு வருகிறது. இது தவிர ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒன்று வீதம் 6 எண்ணிக்கையிலான வீடியோ கண்காணிப்பு குழுக்களும் செயல்பட்டு வருகிறது. மேற்படி பறக்கும் படை குழுவினரால் 28.03.2024 மு.ப 6.00 மணி முதல் 29.03.2024 மு.ப 6.00 மணி வரை ரூ.5,75,400/-ம் இது வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கம் ரூ.25,06,500/- மற்றும் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட மடிக்கணிணி மற்றும் பரிசுப் பொருட்கள் மதிப்பு ரூ.16,73,200/-தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய வகையில் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.