காதல் கணவனை விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் சென்ற பள்ளி ஆசிரியை!
காதல் கணவனை விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் சென்ற பள்ளி ஆசிரியை!
காதல் கணவனை விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் சென்ற பள்ளி ஆசிரியை!
திருச்சிமாவட்டம் துறையூர் அருகேயுள்ள கோம்பைபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜ்.
இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நித்யா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். நித்யா கோம்பைபுதூரில் உள்ள அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றினார்.
இந்நிலையில் நித்யா அதிக நேரம் செல்போனில் பொழுதைக் கழித்ததாக கூறப்படுகிறது. இதில் இன்ஸ்டாகிராமில் நவீன் என்ற வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
கடந்த இரண்டு தினங்களாக திடீரென நித்யாவை காணவில்லை. அதனால் இன்ஸ்டாகிராம் காதலன் நவீனுடன் சென்றிருக்கலாம் என கணவர் திருச்சி துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கள்ளக்காதலனுடன் ஓடிய அரசுப் பள்ளி தற்காலிக ஆசிரியை நித்யாவை தொலைபேசி எண்ணைக் கொண்டு தேடி வருகின்றனர். காதல் திருமணம் செய்த பள்ளி ஆசிரியை வேறொரு நபருடன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.