உரிய ஆவணமின்றி காரில் கொண்டுசென்ற ரூ.86 ஆயிரம் பறிமுதல்!
தூத்துக்குடியில் தோதல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.86 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தோதல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, மாவட்டம் முழுவதும் தோதல் பறக்கும்படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலையில் பொட்டல்காடு விலக்கு பகுதியில் தோதல் அதிகாரி பொன்மாரி தலைமையிலான பறக்கும்படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தனா். அதில், உப்பள உரிமையாளா் ஒருவா் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.86 ஆயிரத்து 750 கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தை பறிமுதல் செய்த தோதல் அதிகாரிகள், அதை தூத்துக்குடி வட்டாட்சியா் பிரபாகரிடம் ஒப்படைத்தனா்.