வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!

வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!

வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடி அருகே வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

பாளையங்கோட்டை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலை, கிராமப்புற சாலைகளை விட மோசமாக உள்ளது. சாலையில் விரிசல் மற்றும் பள்ளங்கள் நிறைந்து, அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இது தொடர்பாக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சர்வின் ராயன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். 

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, சாலை 6 ஆண்டுகளாக ஏன் மோசமாக உள்ளது. இதனை சரி செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தூத்துக்குடி – நெல்லை சாலையில் உள்ள வாகைக்குளம் சுங்கச்சாவடி, 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.