அதிர்ச்சி.. ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற காவலரை சரமாரியாக தாக்கிய வடமாநிலத்தவர்கள்!
சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரிய மசூதி எதிரே உள்ள சங்கம் உணவகத்தில் இரவு உணவு சாப்பிட வந்த இரு இளைஞர்களை வடநாடு ஊழியர்கள் அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள சங்கம் உணவகத்துக்கு நள்ளிரவில் காவலர் ஒருவர் தனது நண்பருடன் சாப்பிடச் சென்றார். அப்போது ஹோட்டல் ஊழியர்கள் அவர்களை மற்றொரு இருக்கையில் உட்காரச் சொன்னார்கள்.
நாங்கள் இதே இருக்கையில் அமர்ந்து சாப்பிடுவோம், இங்கு சாப்பிடுவதில் என்ன தவறு என்று ஊழியர்களிடம் கேட்டனர். இதனால், ஓட்டல் ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காவலர் மற்றும் அவரது நண்பர் இருவரையும் சங்கம் உணவகத்தில் பணிபுரியும் வடமாநிலத்தவர் கரண்டி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர்.
இதில், உணவகத்தில் சாப்பிட வந்த இரண்டு வாடிக்கையாளர்களில் ஒருவரான இளம் போலீஸ் காவலரின் முதுகில் காயம் ஏற்பட்டு, சட்டை கிழிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உணவகத்திற்கு வந்த பொதுமக்கள் போலீசில் புகார் அளித்தனர். உடனடியாக திருவல்லிக்கேணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, வடமாநில இளைஞர்கள் மற்றும் போலீஸ்காரர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். உணவகத்திற்கு சாப்பிட வந்த வாடிக்கையாளர்கள் உணவு பரிமாறும் போது அவர்களை வெளியேற்றியது வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.