Bigg boss 9 | பணப்பெட்டியுடன் சென்ற கானா வினோத்.. மொத்த சம்பளம் இத்தனை லட்சமா?
Bigg boss 9 tamil | பிக்பாஸில் பணப்பெட்டியை எடுத்து சென்ற வினோத் சம்பளத்துடன் மொத்தம் எவ்வளவு ரூபாய் கொண்டு செல்கிறார் என்று தெரியுமா?
பிக்பாஸ் 9வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியில் பல அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் கானா வினோத், சபரி, திவ்யா கணேஷ், சாண்ட்ரா, அரோரா, விக்ரமன் என ஆறு பேரும் இறுதிச் சுற்றுக்குத் தயாராக இருந்தனர், இதில், இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்றது.
இதில் இறுதியாக ரூ.18 லட்சம் சேகரிக்கப்பட்டிருந்தது. அப்போது கானா வினோத் அனைவரையும் அதிர்ச்சியாக்கும் வகையில் அந்த பெட்டியை எடுத்து வெளியேறிவிட்டார். டைட்டில் வின்னராக வேண்டியவர் பெட்டியை எடுத்துவிட்டார் என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். ஏனென்றால் வோட்டிங் அடிப்படையில் அனைவரும் நெருங்க முடியாத அளவிலான வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தவர் தான் கானா வினோத்.
இந்த நிலையில் பணப்பெட்டியில் இருந்த ரூ.18 லட்சத்துடன் அவர் எவ்வளவு ரூபாய் வீட்டிற்கு எடுத்து செல்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது அவர் பணப்பெட்டியில் இருந்த ரூ.18 லட்சத்துடன் சேர்த்து மொத்தம் ரூ.50 முதல் ரூ.52 லட்சம் வரை வீட்டிற்கு எடுத்து செல்வார் என்று தெரிகிறது. டாக்ஸ் இல்லாமல் கைக்கு மட்டுமே இந்த தொகையை அவர் எடுத்து செல்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது நிச்சயம் ஒரு பெரிய தொகை எனவும், அவரின் தேவைகளை பூர்த்தி செய்ய இது நிச்சயம் உதவும் எனவும் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இருந்தாலும் அவர் பெட்டியை எடுக்கவில்லை என்றால் வெற்றி பெற்று மேலும் பணத்தை அள்ளியிருக்கலாம் என்றும் குமுறி வருகின்றனர்.