ரோடு சரியில்லையா? நம்ம சாலை ஆப்பில் புகாரளிக்கலாம்! தமிழக அரசு அறிவிப்பு

ரோடு சரியில்லையா? நம்ம சாலை ஆப்பில் புகாரளிக்கலாம்! தமிழக அரசு அறிவிப்பு

மாநில, மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள பழுதுகளை பொதுமக்கள் புகைப்படத்துடன் புகாரளிக்கும் வகையில் 'நம்ம சாலை' எனும் செயலியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்  அறிமுகம் செய்து வைத்தார்

சாலைகளில் பள்ளங்கள், மரம் விழுதல், நீர் தேங்கி நிற்பது உள்ளிட்டவை குறித்த புகார்கள் 'நம்ம சாலை ' செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டால், 72 மணி நேரத்திற்குள் சரி செய்யப்படும் வகையிலான செயலியை, சென்னை கிண்டி நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உதயநிதி அறிமுகப்படுத்தினார். 

நம்ம சாலை ஆப்பில் பொதுமக்கள் பதிவேற்றும் புகார்கள் மின்னஞ்சல் மூலமாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, புகார்கள் சரி செய்யப்படுவதுடன், சரிசெய்யப்பட்ட சாலையின் புகைப்படங்கள் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு புகாரளித்தவரின் தொலைபேசி எண்ணுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

பள்ளங்களற்ற சாலை' எனும் இலக்குடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இச்செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் புகார்களில் மாநில நெடுஞ்சாலைப் பள்ளங்கள் 24 மணி நேரத்திற்குள்ளும் மாவட்ட சாலைகளில் ஏற்படும் பள்ளங்கள் 72 மணி நேரத்திற்குள்ளும் சரிசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆப் டவுன் லோடு செய்ய:-

https://play.google.com/store/apps/details?id=com.nammasaalai&hl=en_US