சாலையை சீரமைக்க கோரி வாலிபர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம்!
கோவில்பட்டி அருகே சாலையை சீரமைக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
கோவில்பட்டி அருகே சாலையை சீரமைக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
கோவில்பட்டி அருகே உள்ள அத்தைகொண்டான் ரோடு, சித்தி விநாயகர் கோவில் முதல் காந்திநகர் வரை உள்ள தார் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிய காரணத்தினால் மிகவும் மோசமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற உள்ளது. எனவே மேற்படி சாலையை சீரமைக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோவில்பட்டி கமிட்டி சார்பாக கையெழுத்து இயக்கம் வாலிபர் சங்க நிர்வாகி இசக்கியப்பன் தலைமையில் நடைபெற்றது.
சிஐடியு மூத்த தோழர். மோகன்தாஸ் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் இ.சுரேஷ், சிஐடியூ மாநில குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, வாலிபர் சங்க முன்னாள் தலைவர்கள் சின்னத்தம்பி, தேவேந்திரன், விஜயராஜ், மணிகண்டன், உமாசங்கர் மாவட்ட குழு உறுப்பினர்கள் அய்யனார் மற்றும் ரமேஷ், அப்பகுதி இளைஞர் அய்யனார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.