தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் பற்றி தவறான கருத்துகளை வெளியிட வேண்டாம்: மேயர் வேண்டுகோள்!
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பேருந்து நிலையம் பற்றி தவறான கருத்துகளை வெளியிட வேண்டாம் என மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பேருந்து நிலையம் பற்றி தவறான கருத்துகளை வெளியிட வேண்டாம் என மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நிதியில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் பேருந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. .இதுகுறித்து மேயர்ஜெகன் பெரியசாமி தெரிவிக்கையில் தூத்துக்குடி பாளை ரோட்டில் இருந்த பழைய அண்ணா பேருந்து நிலையம் 1.36 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வந்தது. அ.தி.மு.க.ஆட்சியில் மத்திய அரசு இந்தியாவில் பல மாநகரங்களை தேர்வு செய்து ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி அதற்கு நிதி ஒதுக்கீடு செய்தது.
மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து நிதி வழங்கியது. தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி நிதியில் விரிவாக்கம் செய்ய அரசு 8.10.2018ல் ரூ 53 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனாலும் அண்ணா பேருந்து நிலைய விரிவாக்கத்திற்கு தூத்துக்குடி மீனாட்சிபுரம் அரசு போக்குவரத்து கழக 2 ஏக்கர் பணிமனை இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கு மாற்றாக மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் அருகே பனிமணைக்கு இடம் ஒதுக்கீடு தர சம்மதம் தெரிவித்தது.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் ரூ 53 கோடி ஸ்மார்ட் சிட்டி நிதியில் விரிவாக்கம் செய்ய அரசு ஆணை பிறப்பித்தது. தூத்துக்குடி பழைய நிலையம் விரிவாக்க பணிகள் தொடங்கி 1 ஆண்டு, 6 மாதத்தில் முடிந்து தர ஒப்பந்ததாரரை அரசு கேட்டுக் கொண்டது. 2013ம் ஆண்டு தொடங்கி குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படாமல் இருந்ததை திமுக ஆட்சி பொறுப்பேற்றபின் இரண்டு ஆண்டுகளில் உள்ளாட்சி துறை அமைச்சர் நேரு, அமைச்சர் கீதாஜீவன்;, கனிமொழி எம்.பி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பணியை ஆய்வு செய்து பார்வையிட்டு அது சம்பந்தமாக அதிகாரிகளிடம் கருத்துக்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.
மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஓராண்டில் பல தடவையும் பணியை பார்த்து சென்றார். வியாபாரிகளுக்கு 110 கடைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதோடு, மக்கள் உள்ளே வந்து இருக்கை வசதி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மற்ற பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகின்றன. தினமும் 250க்கும் மேற்பட்ட தனியார் அரசு பேருந்துகள் வந்து செல்லும் வகையில் கட்டமைப்பு பணிகள் செய்யப்பட்டு முடியும் தருவாயை எட்டியுள்ள நிலையில் உள்ளே பேருந்துகள் சென்று எடுக்க முடியாத நிலை இருப்பதாக சோதனை ஓட்டத்தில் தெரியவந்துள்ளதாக சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அதில் எதுவும் உண்மை இல்லை.
அதிகாரிகள் நடத்திய ஆய்வின் போது நானும் பல முறை சென்று பணிகளை பார்வையிட்டு வந்துள்ளேன், முறையாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து தேவையற்ற கருத்துகளை பரப்பி அவதுறுகளை வெளியிடவேண்டாம். திமுக ஆட்சி எப்போதுமே மக்களுக்கான பணிகளையும் நல்ல திட்டங்களையும் செயல்படுத்தும் கொள்கையுள்ள கட்சி அதிமுக ஆட்சி போல் கோமாளி வேஷம் போட்டு மக்களை ஏமாற்றும் கட்சி உண்மை நிலவரத்தை தெளிவாக தெரிந்து கொண்டு தகவல்களை பதிவிடவும் இது போன்ற தேவையற்ற கருத்துகளை இனி வரும் காலங்களில் யாரும் பரப்ப வேண்டாம் என்று மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.