போலீசாரை அவதூறாக பேசியதாக ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் மீது வழக்குப் பதிவு!

தூத்துக்குடியில் காவல்துறையினரை அவதூறாக பேசியதாக ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசாரை அவதூறாக பேசியதாக ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் மீது வழக்குப் பதிவு!

தூத்துக்குடியில் காவல்துறையினரை அவதூறாக பேசியதாக ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே ஓபிஎஸ் அணி மற்றும் அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என்று அதிமுக சார்பில் வழக்கறிஞர்கள் ஏற்கனவே எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தனர்.

இதையடுத்து அங்கு கட்டியிருந்த அதிமுக கொடிகளை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அப்போது ஓபிஎஸ் அணியின் தெற்கு மாவட்ட செயலாளர் புவனேஸ்வரன் என்பவர் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து அவதூறாக பேசினாராம். இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் கங்கைநாத பாண்டியன் தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் புவனேஸ்வரன் மீது 353, 506/1 ஆகிய 2 பிரிவுகளின் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.