வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்களை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல் போன்றவற்றை வாக்காளர்கள் மேற்கொள்வதற்கு வசதியாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், நவ.16, 17 மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் திருத்துதல் முகாம்களை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, திமுக தலைமையால் நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இன்பா ரகு, தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.