தமிழக முதல்வரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 24 மணி நேர தர்ணா போராட்டம்!

தமிழக முதல்வரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 24 மணி நேர தர்ணா போராட்டம்!

தமிழக முதல்வரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 24 மணி நேர தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பத்து அம்ச  கோரிக்கைகளை மற்றும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் 24 மணி நேர தர்ணா போராட்டம் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக அரசுக்கு எதிராக எதிர்வினை ஆற்றுவோம் என எச்சரிக்கை 

திமுக அரசு கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் பழைய ஓய்வு ஊதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது ஆனால் நான்கு ஆண்டுகள் ஆகியும் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை 

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் 

இந்நிலையில் தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில மாநாட்டின் எடுக்கப்பட்ட முடிவின்படி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 24 மணி நேர தருண போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது இதை எடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அனைத்து துறை ஊழியர்கள் 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 

திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் திமுக ரசிகராக வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளோம் அதற்கும் செவி சாய்க்காவிட்டால் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசுக்கு எதிராக எதிர்வினை ஆற்றுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்

அரசு ஊழியர்களின் இந்த போராட்டம் காரணமாக வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பணிகள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது 

போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மகேந்திர பிரபு தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் துணைக்குழு ஆ.மகேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் ந.வெங்கடேசன் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் உமாதேவி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சிஐடியூ மாநில செயலாளர் ரசல் சிறப்புரை ஆற்றினார்.  TNGPA மாவட்டச் செயலாளர் இராமமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் அ.சாம்டேனியல்ராஜ், மாநில செயலாளர் லில்லி புஷ்பம்,  TNPTF மாவட்டச் செயலாளர் மா.கலைஉடையார் உட்பட சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றுள்ளனர்.