மாப்பிள்ளையூரனியை மாநகராட்சியுடன் இணைக்க கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்!

மாப்பிள்ளையூரனியை மாநகராட்சியுடன் இணைக்க கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்!

மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்து பகுதிகளை தூத்துக்குடி மாநகராட்சியுடன்  இணைக்க வேண்டும் என  கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதியில் குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டம் பஞ்சாயத்து தலைவர் சரவணன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதி மழை வெள்ளத்தில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய்க்கு தடையாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்

 

மேலும் பொங்கல பண்டிகைக்காக பொதுமக்களுக்கு நியாய விலைக்கடை மூலம் இலவச வேஷ்டி சேலைகள் வழங்கப்படவில்லை. ஆனால் வழங்கப்பட்டு விட்டதாக செல்போனில் மெசேஜ் அனுப்பி உள்ளனர். இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என குற்றம் காட்டினர்.

 

இதைத்தொடர்ந்து மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்து பகுதியை மாநகராட்சியுடன் இணைக்க கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென ஒரு தரப்பினர் கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் மாநகராட்சி உடன் இணைத்தால் இலவச பட்டா வழங்க முடியாது தீர்மான நிறைவேற்றக்கூடாது என்றனர்.

 

இதைத்தொடர்ந்து இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்கிவிட்டு மாநகராட்சி உடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.