ஆற்றில் குளிக்கும்போது உயிரிழந்த காவலர் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

ஆற்றில் குளிக்கும்போது உயிரிழந்த காவலர் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

ஆற்றில் குளிக்கும் போது தவறி விழுந்து உயிரிழந்த காவலர் உடல் பசுவந்தனையில் காவல்துறை மரியாதையுடன்  நல்லடக்கம் -

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தூர் பாண்டியன் மகன் கோவிந்தராஜ்(24)இவர் 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். கோவையில் பணியை தொடங்கிய இவர் நீலகிரி மாவட்ட எல்லைப் பகுதியான சேரம்பாடி காவல் நிலைய எல்லைப் பகுதியில் சோலாடி சோதனை சாவடியில் பணியாற்றி வந்துள்ளார் . காவலர் கோவிந்தராஜ் நவம்பர் 24 அன்று சோலாடி பகுதியில் உள்ள ஆற்றிற்கு நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார்.அப்போது குளிக்கும்போது எதிர்பாராத விதமாக பாறையில் தவறி கீழே விழுந்ததில் கோவிந்தராஜ்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது உடனிருந்த காவலர்கள் அவரை மீட்டு

பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், கோவிந்தராஜ் ஏற்கனவே உயிரிழந்து விட்டனர் என்று கூறி உள்ளனர். இதையடுத்து காவலர் கோவிந்தராஜ் உடலை கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உடற்க்கூறாய்வு செய்யப்பட்டது. இதை அடுத்து அவரது உடல் சொந்த ஊரான ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. காவலர் கோவிந்தராஜ் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதன் பின்னர் தமிழக காவல்துறை சார்பாக மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் தலைமையில் 21 குண்டு முழங்க அரசு மரியாதை செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இதன் பின்னர் கோவிந்தராஜ் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

.