அனுமதிச் சீட்டு இன்றி பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்றால் வாகனங்கள் பறிமுதல்!

அனுமதிச் சீட்டு இன்றி பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்றால் வாகனங்கள் பறிமுதல்!

அனுமதிச் சீட்டு இன்றி பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்றால் வாகனங்கள் பறிமுதல்!

பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சிறப்பு அனுமதிச்சீட்டு பெற வேண்டும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழிய பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் "விளாத்திகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் தகுதிச் சான்று இன்றி இயக்கிய ஆட்டோ ரிக்ஷா, குடிநீா் டேங்க் மினி லாரி, சுமை வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதிக பாரம், சாலை வரி செலுத்தாமலும் அனுமதிச் சீட்டு இல்லாமலும் இயக்கிய டிப்பா் லாரி பறிமுதல் செய்யப்பட்டதோடு சாலைவரி ரூ.22,100 மற்றும் அபராதம் ரூ.77 ஆயிரம் விதிக்கப்பட்டது. எனவே வாகன உரிமையாளா்கள் தங்கள் வாகனங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய சாலை வரியை உடனடியாக செலுத்த வேண்டும். உரிய ஆவணங்கள் இன்றி வானங்களை இயக்கக் கூடாது.

மேலும் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ரிக்ஷா, வேன், சுற்றுலா சிற்றுந்து போன்ற வாகனங்களுக்கு சிறப்பு அனுமதிச் சீட்டு பெற்ற பின்பு தான் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்ல வேண்டும். அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.