தூத்துக்குடி: மெஞ்ஞானபுரம் அருகே மதுகுடிப்பதை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை!!

மெஞ்ஞானபுரம் அருகே மதுகுடிப்பதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள செட்டிவிளையை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் தினேஷ் (22). இவர் சென்னையில் உள்ள மளிகைகடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அங்கேயே தங்கி கடையில் வேலை பார்த்து வந்த அவர், அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வாராம்.
இந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் செட்டிவிளைக்கு வந்துள்ளார். அவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு சென்று பெற்றோர், உறவினர்களிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினமும் அவர் மதுபோதையில் வீட்டிற்குவந்த அவர் பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் பெற்றோர், மதுகுடிப்பதை கைவிடுமாறு அவரை கண்டித்துள்ளனர்.
இதில் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்ததும் மெஞ்ஞானபுரம் போலீசார் சம்பவ வீட்டிற்கு சென்று, அவரது உடலைக் கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம்குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
----------------------------------------------------------------
உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள...
WHATSAPP GROUP LINK 1 :- CLICK HERE
WHATSAPP GROUP LINK 2 :- CLICK HERE