“ஓட்டப்பிடாரம் மாணவிகள் விடுதியில் கொடுமை? பாதுகாவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை கோரி இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்”

“ஓட்டப்பிடாரம் மாணவிகள் விடுதியில் கொடுமை? பாதுகாவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை கோரி இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்”

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளி மாணவிகள் விடுதியில், ஓட்டப்பிடாரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் ஆறு மாணவிகள் தங்கி வருகின்றனர்.

இந்த விடுதியில் பணியாற்றும் பாதுகாவலர் (Warden) சத்திய பிரியதர்ஷினி என்பவர், கல்லூரி மாணவிகளை பல்வேறு வகைகளில் மனரீதியாக துன்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வற்புறுத்துவது, பாதுகாவலர் உடுத்தும் துணிகளை துவைக்க சொல்லுவது, உணவு வேண்டுமென்றால் மாணவிகளையே சமைக்க வைத்து, அதற்கு முன் தனது கை கால்களை அமுக்கி விட வேண்டும் என கட்டாயப்படுத்துவது, மாணவிகளை ஒருமையில் பேசுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த கொடுமைகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதனால் மாணவிகள் மனரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விடுதியில் தங்கி வரும் பள்ளி மாணவிகள், பயம் மற்றும் சமூக அழுத்தம் காரணமாக இந்த விவகாரங்களை வெளியே சொல்ல தயங்கும் நிலை இருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்க வேண்டும், மேலும் மாணவிகளை கொடுமைப்படுத்திய பாதுகாவலர் சத்திய பிரியதர்ஷினி மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுத்து இடமாற்றம் செய்ய வேண்டும் என

இந்திய மாணவர் சங்கம் – தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.