தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு ரூ. 20 ஆயிரம் நிவாரணம் வழங்க சிபிஎம் கோரிக்கை..!
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு ரூ. 20 ஆயிரம் நிவாரணம் வழங்க சிபிஎம் கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகர், புறநகர், ஶ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, கருங்குளம், காயல்பட்டினம், திருச்செந்தூர், சாத்தான்குளம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் மழை காரணமாக மக்கள் பாதிக்கக்கூடிய வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
தூத்துக்குடி மாநகர் பகுதிகளான லோகியா நகர், மாசிலாமணி புரம் , பாளையங்கோட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், தலைமையில் மழை பெய்துள்ளது வெள்ளம் பாதிக்கபட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து அவர் கூறுகையில்
தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்துள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பிரையன்ட் நகர், முத்தம்மாள் காலனி, மாசிலாமணிபுரம் , ராஜிவ் நகர், தாலமுத்து நகர், முத்தையா புரம், ஸ்பிக் நகர், சுந்தர் நகர் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்கள் பெய்த கனமழை காரணமாகவும் தூத்துக்குடி ஒன்றிய பகுதிகளான கோரம்பள்ளம், காலங்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக மாநகர் பகுதிகளை மழை நீரானது சூழ்ந்துள்ளது.
தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு பகுதிகள் நீரிணை கடலில் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்து உணவு வழங்கி வருகிறது. இருப்பினும் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மக்களுக்கு உரிய நிவாரணம் என்பது கிடைக்க வில்லை, பெரும்பான்மையான பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் உடமைகள், பொருட்களை இழந்து உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மழையில் சிகி மக்கள் இருக்க கூடிய பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மாநகரில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் என்பது வழங்க படவில்லை, மின்சாரம் இல்லாமல் இரவு நேரங்களில் பொதுமக்கள் பீதியில் இருந்து வருகின்றனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு சென்னைக்கு தமிழக அரசு ரூ.6 ஆயிரம் வழங்கியுள்ளது. மழை வெள்ளத்தால் மக்களின் வீட்டு உபயோக பொருட்கள், வாகனங்கள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது.எனவே தமிழக அரசாங்கம் ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், அதேபோல் ஶ்ரீவைகுண்டம் , கருங்குளம் ,ஆழ்வார் திருநகரி, உள்ளிட்ட தாமிரபரணி நீர்வழி தடத்தை ஒட்டிய பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த நெல், வாழைகள் முற்றிலும் சேதம் ஏற்பட்டது. எட்டையபுரம், விளாத்திகுளம், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் பயிரிட்ட கம்பு, பாசி, உள்ளிட்ட தானியங்கள் மழை காரணமாக சேதம் அடைந்துள்ளது. சேதமடைந்துள்ள நெல், கம்பு, பாசி, போன்றவற்றிற்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 30ஆயிரம், வாழை க் கு ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் டிசம்பர் 21 ஆம் தேதி பார்வையிட்டு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க உள்ளார். பாதிக்கப்பட்டுள்ள எனன கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி க்குடப்ட்ட 43 வது வார்டுக்குட்பட்ட பகுதியில் மழை வெள்ளம் பாதிக்கபட்ட மக்கள் தங்கியுள்ள முகாமினையும் மழை தேங்கியுள்ள பகுதிகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாநகர் செயலாளர் தா.ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அப்பா துரை, புவி ராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மாரியப்பன், எம்.எஸ்.முத்து, சிபி எம் மாமன்ற உறுப்பினர் முத்து மாரி , மாநகர் குழு உறுப்பினர் ஆறுமுகம், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.