தூத்துக்குடி பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும்: ஓபிஎஸ் அணி கோரிக்கை!

தூத்துக்குடி பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும்: ஓபிஎஸ் அணி கோரிக்கை!

தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அதிமுக ஓபிஎஸ் அணி மாநகர் மாவட்ட செயலாளர் ஏசாதுரை மற்றும் நிர்வாகிகள் ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், எட்டையாபுரம் ரோட்டில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையம் அப்போதைய திமுக ஆட்சிக்காலத்தில் திறக்கப்பட்டது. அந்த பேருந்து நிலையத்திற்கு தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் கு.காமராஜர் பெயரை சூட்டிட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.