தூத்துக்குடி –திருச்செந்தூருக்கு புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கோரிக்கை

தூத்துக்குடி –திருச்செந்தூருக்கு புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கோரிக்கை

தூத்துக்குடி –திருச்செந்தூருக்கு புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

     தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் பகுதிகளுக்கு புதிய அம்ரித் பாரத் ரயில் சேவைகளை தொடங்க வேண்டும் என, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சித்ராங்தன் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் எல்.முருகனிடம் அளித்த கோாிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

      நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தூத்துக்குடிக்கு வந்து செல்லும் அனைத்து ரயில்களும் மேலூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமைக்கு, தூத்துக்குடி மாவட்ட மக்களின் சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நடவடிக்கை, பொதுமக்கள் மற்றும் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், வணிகர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஆன்மிகப் பயணிகள் அதிகளவில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். ஆனால், நேரடி மற்றும் வசதியான ரயில் சேவைகள் போதிய அளவில் இல்லாததால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

      இதனை கருத்தில் கொண்டு, தூத்துக்குடியிலிருந்து காலை 7.45 மணிக்கு புறப்பட்டு மாலை 6.15 மணிக்கு தாம்பரம் அல்லது 6.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும் வகையில், ஒரு பகல் நேர அம்ரித் பாரத் விரைவு ரயிலை இயக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே ரயிலை மறுமார்க்கமாக, சென்னையிலிருந்து எழும்பூர் 9.15 இரவு, தாம்பரம் 9.40 இரவு திருச்செந்தூருக்கு இரவு நேர சேவையாக இயக்கலாம். இது திருநெல்வேலிக்கு காலை 8 மணிக்கும், திருச்செந்தூருக்கு 10.10 மணிக்கும் சென்றடையும் வகையில், பழைய ஹவுரா எக்ஸ்பிரஸ் 12665 66, 12663 64 வழித்தடத்தை பயன்படுத்தி இயக்க முடியும்.

     மேலும், திருச்செந்தூரிலிருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வந்தடையும் வகையில், கொல்லம் மெயில் 16102 வழித்தடத்தை பயன்படுத்தி இயக்கி, பின்னர் அதே ரயிலை சென்னையிலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்படச் செய்து மாலை 6 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும் மற்றொரு பகல் நேர சேவையாக மாற்றவும் வாய்ப்பு உள்ளதாக கூறயுள்ளாா். எனவே, தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் பகுதிகளைச் சார்ந்த பொதுமக்களின் நீண்டகால தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இந்த வழித்தடத்தில் புதிய அம்ரித் பாரத் ரயில் சேவைகளை தொடங்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்று கோாிக்கை மனுவில் கூறியுள்ளாா்.