தூத்துக்குடியில் விஜயகாந்த் 30வது நாள் நினைவு அமைதி ஊர்வலம்!

தூத்துக்குடியில் விஜயகாந்த் 30வது நாள் நினைவு அமைதி ஊர்வலம்!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 30வது நாள் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. 

தூத்துக்குடி பெரியார் சிலை முன்பு தொடங்கிய பேரணிக்கு தேமுதிக மாநகர் மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் தலைமை வகித்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே நிறைவடைந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, ஓபிசி அணி மாநில தலைவர் விவேகம் ரமேஷ், மாவட்ட தலைவர் சித்ராங்கன், ஐஜேகே தெண்மண்டல அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன், சமத்துவ மக்கள் கழகம் அற்புதராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கிதர் பிஷ்மி, மக்கள் நீதி மய்யம் ஜவஹர், அதிமுக ஓபிஎஸ் அணி ஏசாதுரை, மதிமுக முருருகபூபதி, சிபிஐ ஞானசேகரன், சிபிஎம் ராஜா, விடுதலை சிறுத்தைகள் ஆட்டோ கணேசன், ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் விஜய் ஆனந்த், தமுமுக அகம்மது இக்பால், பறையர் பேரவை இளவரச பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.