தூத்துக்குடியில் அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் 24 மணி நேர பட்டினி போராட்டம் !

தூத்துக்குடியில் அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் 24 மணி நேர பட்டினி போராட்டம் !

15வது ஊதிய ஒப்பந்தத்தை உடனே அமல்படுத்த வேண்டும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை உடனே வழங்கிட வேண்டும் பழைய ஓய் ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் தேவையான பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் தூத்துக்குடி எஸ்சிடிசி பனிமனை முன்பு திங்கட்கிழமை 24 மணி நேர பட்டினி போராட்டம் துவங்கியது.  

இதற்கு பணிமனைத் தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் ரசல் துவக்கி வைத்து பேசினார். ஓய்வு பெற்றோர் அமைப்பு முத்துகிருஷ்ணன், சி ஐ டி யு மாவட்ட குழு உறுப்பினர் ரவி தாகூர், அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் பிச்சைமணி, மின் ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகி ராமையா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். செவ்வாய்க்கிழமை காலை 10 மணியுடன் இந்த போராட்டமானது நிறைவுக்கு வருகிறது இதனை சிஐடியூ தூத்துக்குடி மாவட்ட தலைவர் பேச்சிமுத்து முடித்து வைக்கிறார்..

----------------------------------------------------------------

உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள‌...

WHATSAPP GROUP LINK 1 :- CLICK HERE

WHATSAPP GROUP LINK 2 :- CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL CLICK HERE :-

GOOGLE NEWS LINK :- CLICK HERE