கோவில்பட்டியில்.. NO PARKINGல் நின்ற காருக்கு பதில் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திற்கு அபராதம் விதித்த அவலம்!!

கோவில்பட்டியில்.. NO PARKINGல்  நின்ற காருக்கு பதில் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திற்கு அபராதம் விதித்த அவலம்!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலூகா அலுவலகத்தில் பணியாற்றக் கூடிய பெண் ஊழியர் ஒருவருக்கு செல்போனிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அவருடைய இருசக்கர வாகனம் நோ பார்க்கிங் பகுதியில் நின்ற தாகவும், ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வந்துள்ளது. மேலும் அவருடைய வாகனத்திற்கு பதிலாக கார் புகைப்படம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.  தற்போது இந்த அபராதம் விதிக்கப்பட்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி கடும் கண்டனத்திற்கு உள்ளாகி உள்ளது.

இதேபோன்று ஹெல்மெட் போடாமல் சென்ற ஒருவருக்கு ஹெல்மெட் அபராத  கட்டணம் மட்டுமின்றி, அவர் செல்போன் பேசி சென்றதாகவும் சேர்த்து ரூ.2000வரை கட்டணம் விதித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்று பல வாகன ஓட்டுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போக்குவரத்து காவல் துறையிடம் புகார் தெரிவித்தால் கண்டு கொள்வதில்லை, குற்றம் சாட்டியவர்களை மிரட்டும் தோணியில் பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.