தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் ரூ.1,072 கோடியாக உயர்வு: நிதிநிலை அறிக்கை வெளியீடு!!
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முதல் அரையாண்டில் நிகர லாபம் ரூ.1,072 கோடியாக உயர்ந்து உள்ளது.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு, 1921 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வரும் பாரம்பரியமிக்க தனியார் துறை வங்கியாகும். வங்கியானது தனது வரலாற்றில் தொடர்ந்து 100 வருடங்களுக்கும் மேலாக இலாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
வங்கியானது 552 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றின் மூலம் நாட்டின் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் தனது விரிவாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு ஏறத்தாழ 5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற இயக்குனர் குழு கூட்டத்தில், தணிக்கை செய்யப்பட்ட காலாண்டு மற்றும் 31.03.2024 அன்று நிறைவு பெறும் நிதி ஆண்டின் நிதி நிலை முடிவுகளை வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மொத்த வர்த்தகம் ₹85,348 கோடியிலிருந்து ₹89,485 கோடியாக அதிகரித்துள்ளது. CASA ₹13,736 கோடியிலிருந்து ₹14,676 கோடியாக அதிகரித்துள்ளது.
பங்குகளின் புத்தக மதிப்பு ரூ. 438 லிருந்து ரூ.500 ஆக உயர்ந்துள்ளது. நிகர இலாபம் ரூ.1,029 கோடியிலிருந்து ரூ.1,072 கோடியாக உயர்ந்துள்ளது. வட்டி வருமானம் ₹4,081 கோடியிலிருந்து ₹4,848 கோடியாக மேம்பட்டுள்ளது. மொத்த வருமானம் ₹4,710 கோடியிலிருந்து ₹5,493 கோடியாக உயர்ந்துள்ளது. RAM (சில்லரை, விவசாயம், சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள்) கடன் தொகை 87 சதவீதத்திலிருந்து 91 சதவீதமாக உயர்ந்துள்ளது. மொத்த கடன் தொகையில் SMA ஆனது 6.51% இலிருந்து 3.97% ஆக குறைந்துள்ளது. வலியுறுத்தப்பட்ட சொத்துகளின் (Stressed Asset) விகிதம் 3.18% Y-o-Y இலிருந்து 2.70% ஆகக் குறைந்துள்ளது.
CASA ஆனது, ₹13,736 கோடியிலிருந்து ₹940 கோடி அதிகரித்து 31 மார்ச் 2024 இல் ₹14,676 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் மொத்த வைப்புநிதி ரூ. 49,515 கோடியாக உயர்ந்துள்ளது. (கடந்த ஆண்டின் இதே காலத்தில் ரூ. 47,766 கோடியாக இருந்தது) வங்கியின் மொத்த கடன் தொகை ரூ. 39,970 கோடியாக உயர்ந்து, 6.35% வளர்ச்சியடைந்துள்ளது. நிகர இலாபம் 31.03.2024 அன்று ரூ. 1,072 கோடியாக உயர்ந்துள்ளது. இது 31.03.2023 அன்று முடிவடைந்த கடந்த ஆண்டின் ரூ.1,029 கோடிகளில் இருந்து, 4.18 % வளர்ச்சியடைந்துள்ளது.
நிகர வட்டி வருமானம் 31.03.2024 அன்று 2.72 % வளர்ச்சியடைந்து ரூ. 2,151 கோடியாக உயர்ந்துள்ளது (31.03.2023 அன்று ரூ. 2,094 கோடியாக இருந்தது). சொத்துகள் மீதான வருமான விகிதம் (Return on Asset) 1.84 சதவிகிதமாகவும், பங்குகளின் மீதான வருமான விகிதம் (Return on Equity) 14.44 சதவிகிதமாகவும் உள்ளது. (கடந்த ஆண்டு முறையே 1.97% மற்றும் 16.78 % சதவிகிதமாகும்). வங்கியின் நிகர மதிப்பு (Net worth) ரூ. 6,928 கோடியிலுருந்து 14.33 சதவிகிதம் வளர்ச்சியடைந்து ரூ. 7,921 கோடியாக உயர்ந்துள்ளது.
மொத்த வராக்கடன், வங்கியின் மொத்த கடன் தொகையில் 1.44 சதவிகிதமாகவும், நிகர வராக்கடன் 0.85 சதவிகிதமாகவும் உள்ளது. (கடந்த ஆண்டு, முறையே 1.39 % மற்றும் 0.62 % ஆகும்)
Q4 FY 2023-24 காலாண்டு செயல்பாடுகள்: நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு முந்தைய காலாண்டை விட 5.85% வளர்ச்சி அடைந்துள்ளது. மொத்த வைப்பு நிதி முந்தைய காலாண்டை(Q3FY24) விட 5.80% வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் Q4FY23 ஒப்பிடுகையில் 3.66% வளர்ச்சியைக் கண்டுள்ளது. Q4FY24 காலாண்டில் வங்கி வழங்கிய கடன் முந்தைய காலாண்டை விட(Q3FY24) 4.13% வளர்ச்சி அடைந்துள்ளது, மற்றும் Q4FY23 உடன் ஒப்பிடுகையில் 6.35% வளர்ச்சியை எட்டியுள்ளது.
Q4FY24 காலாண்டில் நிகர வட்டி வருமானம் Q4FY23 உடன் ஒப்பிடுகையில் 5.59% வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஈவுத்தொகை (Dividend) பரிந்துரை 2023-24 நிதியாண்டில், பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு, 2023- 24 ஆம் நிதியாண்டில், தலா ரூ.10 முக மதிப்புள்ள ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ரூ.10/- (100%) இறுதி ஈவுத்தொகை செலுத்த வங்கியின் இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
புதிய முன்னெடுப்பு திட்டங்கள்: இந்த நிதியாண்டில் (2023-24), 22 புதிய கிளைகள் துவங்கப்பட்டன. மேலும், 2023-24ஆம் நிதியாண்டில் இன்னும் 50 புதிய கிளைகளைத் துவக்கத் திட்டமிட்டுள்ளோம். வளர்ந்து வரும் MSME சந்தை வணிகத்தை ஈர்க்க, MSME கடன் செயலாக்க மையம் அகமதாபாத், பெங்களுரு, சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத், மதுரை, மும்பை, தூத்துக்குடி, திருச்சி மற்றும் சேலத்தில் துவக்கப்பட்டுள்ளது. என்று தெரிவித்தார்.
பேட்டியின்போது நிதி குழு தணிக்கை அலுவலர் கிருஷ்ணன், பொது மேலாளர்கள் அசோக்குமார், இன்பமணி, சூர்ய ராஜ், கிருஷ்ணன், ஜெயராமன், சுந்தரேஸ் குமார், நாராயணன், விஜயன், துணைப் பொது மேலாளர்கள் ஆனந்த், கௌதமன், லட்சுமி பிரகாஷ், சுரேந்திரன், பார்த்தசாரதி, ராஜகுமார், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார், தலைமை மேலாளர் கந்தசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.