தூத்துக்குடி மாவட்டத்தில் சிபிஎம் ‍, சிஐடியு சார்பில் பல்வேறு இடங்களில் மே தினம் கொடியேற்றம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சிபிஎம் ‍, சிஐடியு சார்பில் பல்வேறு இடங்களில் மே தினம் கொடியேற்றம்.

மே தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் நூற்றுக்கனக்கான இடங்களில் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமையில் மாசிலாமனிபுரத்தில் உள்ள சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.அர்ச்சுனன் கொடி ஏற்றி வைத்தார். சிஐடியு மாநில செயலாளர் ஆர்.ரசல் மே தின உரையாற்றினார். இதில் மாநகர் செயலாளர் எம்.எஸ்.முத்து, மாவட்டக்குழு உறுப்பினர் காசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாநகர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகர குழு பகுதிக்குட்பட்ட விபி சிந்தன் கிளை 43வது வார்டு கிளை சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.அர்ஜுனன், மாநகரச் செயலாளர் எம்.எஸ். முத்து, மாநகர குழு உறுப்பினர்கள், ஆறுமுகம், ராமமூர்த்தி, தசலீஸ், காஸ்ட்ரோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி ஒன்றியம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி ஒன்றியத்திற்குடபட்ட பகுதிகளான‌ புதுக்கோட்டை, சோரீஸ்புரம், தாளமுத்து நகர், சிலுவைபட்டி, அழகாபுரி விளக்கு ஆட்டோ ஸ்டாண்ட், எம்ஜிஆர் நகர், ஜோதிபாசுநகர், பால தண்டாயுதநகர், துப்பாஸ்பட்டி உட்பட 15க்கும் மேற்பட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு சார்பில் மே தினம் கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிஐடியு மாநிலச் செயலாளர் ஆர் ரசல், சிபிஎம் ஒன்றிய செயலாளர் கே.சங்கரன், மாவட்ட குழு உறுப்பினர் ரவிதாகூர், ஒன்றிய குழு உறுப்பினர்கள் நயினார், முனீஸ்வரன், முத்துச்சிப்பி தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி புறநகர்

சிபி எம் தூத்துக்குடி புறநகர் பகுதியில் மே தின விழா கட்சி அலுவலகத்தில் கட்சி கொடியினை புறநகர குழு உறுப்பினர் பி.டேனியல் ராஜ், சிஐடியு  கொடியினை சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் மந்திரமூர்த்தி ஏற்றி வைத்தனர். சுந்தர் நகர் இபி அலுவலகத்தில் மத்திய அமைப்பு நிர்வாகி பாலசுப்பிரமணியம், புல்வாவெலியில் கிளைச் செயலாளர் பன்னீர்செல்வம், சிஐடியு உப்பு தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கே.பொன்ராஜ், ராமச்சந்திராபுரத்தில் உப்பு தொழிலாளர் சங்க நிர்வாகி எம்.பன்னீர், பழைய காய‌ல் இரட்சணியபுரத்தில் புறநகர குழு உறுப்பினர் எ.முனியசாமி, பழைய காயல் தெற்கு பஜாரில் மூத்த தோழர் மணவாளன், மஞ்சநீர்காயல் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் இரா. பேச்சிமுத்து, கோவளம் மீனவர் காலனி பகுதியில் மூத்த தோழர் முனியசாமி ஆகியோர் மே தின கொடியேற்றினர்.

இந்நிகழ்வுகளில் பழைய காயல் பஞ்சாயத்து தலைவர் செல்வகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர குழு உறுப்பினர்கள் ப.வெள்ளைச்சாமி, ஆர்.சிவபெருமாள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்செந்தூர் ஒன்றிய‌ குழு சார்பில் மே தின கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருச்செந்தூர் ஒன்றிய குழு அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் கொடியை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் ஒன்றிய குழு பகுதிக்குட்பட்ட பிஎஸ்என்எல் அலுவலகம், திருச்செந்தூர் பேருந்து நிலையம், இபி அலுவலகம், திருச்செந்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை, வீரபாண்டியன் பட்டினம் பேருந்து நிறுத்தம், காயல்பட்டினம் பேருந்து நிறுத்தம், ஈபி அலுவலகம் காயல்பட்டினம், லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தம், டிசிடபிள்யூ, சண்முகபுரம் பேருந்து நிறுத்தம், காயாமொழி பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மே தின கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் ஜெபஸ்டின் ராஜ், கலைச்செல்வி, மூத்த தோழர் பன்னீர்செல்வம், ஜெய பாண்டியன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சிவதானுதாஸ், கணேசன், மின் ஊழியர் மத்திய சங்கத் திட்ட செயலாளர் குன்னி மலையான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாத்தான்குளம் ஒன்றிய குழு சார்பில் மே தின கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் ஒன்றிய செயலாளர் சேசு மணி, சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் மூத்த தோழர் பாலச்சந்திர கணபதி, பேய்குளம் பஜாரில் மூத்த தோழர் கிருஷ்ணன் ஆகியோர் கொடியேற்றி வைத்தனர். இந்நிகழ்வுகளில் சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் சேசு மணி முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆழ்வார்திருநகிரி

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மே தின விழா ஆழ்வார்திருநகிரி ஒன்றியத்திற்குட்பட்ட  தென் திருப்பேரை மெயின் ரோட்டில் கொண்டாடப்பட்டது. இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். சீனிவாசன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி பூலான் கொடியேற்றி வைத்தார். இதில் ஆழ்வார்திருநகிரி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி ஒன்றியம்

கோவில்பட்டி ஒன்றியம் சார்பில் மே தின கொடியேற்று விழா கோவில்பட்டி ஒன்றியத்திற்குடபட்ட‌  கிழவி பட்டி, திட்டங்குளம், தெற்கு  திட்டங்குளம்,படர்ந்தபுலி, அய்யனேரி, மந்திதேப்பு, மணியாச்சி,க ரிசல்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இதில் சிபிஎம் கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், மாவட்டகுழு உறுப்பினர்கள் மனி, கிருஷ்ன‌வேனி, முன்னாள் மாநில குழ உறுப்பினர் மல்லிகா, உள்ளிட்ட பலர் கலந்து கொன்டனர்.

எட்டயபுரத்தில் மே தின கொடி ஏற்றும் விழா

எட்டயபுரத்தில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது எட்டயபுரம் தேவன் திடலில்  அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் கொடியை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கு.ரவீந்திரன் ஏற்றி வைத்தார் பட்டத்து விநாயகர் கோவில் திடலில் அமைந்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியினை கட்சியின் மூத்த தோழர் நடராஜன் ஏற்றி வைத்தார் சி ஐ டி யு கட்டுமான சங்க கொடியை சிஐடியு ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் ஏற்றி வைத்தார் பாரதி மில் நுழைவாயிலில் அமைந்திருக்கும் கொடியினை சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் முருகன் ஏற்றி வைத்தார் இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் தோழர் ஜீவராஜ் எட்டயபுரம் 1வது பகுதி கிளைச் செயலாளர் முருகேசன் மூன்றாவது பகுதி கிளைச் செயலாளர் சிவா தாலுகா குழு உறுப்பினர்கள் மாணிக்கவாசகம் கட்டுமான சங்கத் தோழர்கள் மாரிமுத்து துரை உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.

உடன்குடி

உடன்குடி சிபிஎம் அலுவல‌கத்தில் மே தினக் கொடியேற்றப்பட்டது. மூத்த தோழர் ஆதிநாராயணன் கொடியேற்றினார், உடன்குடி பஜாரில் ஒன்றியசெயலாளர் கந்தசாமி,  ஆட்டோ ஸ்டாண்டில் ஒன்றிய குழ உறுப்பினர் மகாராஜன், பரமன்குறிச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர் முருகன், குலசேகரப்பட்டினம் மெயின்பஜாரில் ஒன்றிய குழு உறுப்பினர் சங்கர், குலசேகரப்பட்டினம்தோப்பார் கடை வீதியில்   ஒன்றிய குழு உறுப்பினர் செல்வி, மருதூர் கரையில் மோகன்ராம், மாணிக்கபுரம் பகுதியில் ஒன்றியக் குழு உறுப்பினர் நேரு ஆகியோர் கொடியேற்றினர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி. பூமயில் ஒன்றியக்குழு உறுப்பினர சக்திவேல், முன்னாள் ஒன்றிய செயலாளர் வே.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

திருவைகுண்டம்

திருவைகுண்டம் ஒன்றிய பகுதிக்குடபட்ட முக்காணி கிளையில் மேதினக்  கொடியை மூத்த தோழர் வேலாயுதம் ஏற்றி வைத்தார். அதேபோல் தங்கம்மாள்புரம் பகுதியில் ஒன்றிய செயலாளர்  நம்பி ராஜன், கொடியேற்றி வைத்தார். இதில் தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் பொன்ராஜ், சாயர்புரம் சுவாமி தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்

சிஐடியு தெர்மல்

மே தினத்தை முன்னிட்டு முகாம் ஒன்றில் உள்ள அலுவலகத்தில் தோழர் பொன்னழகு,  சிஐடியு சங்க கொடியினையும், கட்சி கொடியை தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மண்டல செயலாளர் எஸ்.அப்பாதுரை ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

 அதன் தொடர்ச்சியாக NTPL அனல் மின் நிலையம் முன்பு சங்க கொடியை சங்கத்துடைய இணைச் செயலாளர் பிரபா, தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள சங்க கொடியினை சங்கத்துடைய செயலாளர் எஸ்.கணபதி சுரேஷ் ஆகியோர் கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். இதில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு தலைவர் கென்னடி, இணை செயலாளர் கோவிந்தசாமி,  TNPEO மாநிலச் செயலாளர் எஸ்.ஆனந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதுபோல் 1999 ஆம் ஆண்டு மே1 ஆம் தேதி  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய‌ அமைப்பின் முயற்சியால் நிரந்தர பணியில் அமர்த்தப்பட்ட தொழிலாளர்களுக்கு இன்றோடு 25 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றது இது ஒரு மகத்தான சாதனை என்பது குறிப்பிடதக்கது,.