கடலோர பாதுகாப்பு குழும இலவச பயிற்சிக்கு மீனவ இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்!
கடலோர பாதுகாப்பு குழுமத்தால் நடத்தப்படவுள்ள 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்துக்கொள்ள தகுதியுள்ள மீனவர் வாரிசுகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கடலோர பாதுகாப்பு குழுமத்தால் நடத்தப்படவுள்ள 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்துக்கொள்ள தகுதியுள்ள மீனவர் வாரிசுகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் இந்திய கடலோரக் காவல் படை மற்றும் இந்திய கப்பற்படையில் நவிக் (பொது) மற்றும் மாலுமி பணிகளிலும், இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு ஏதுவாக (வழிகாட்டுதல்) இலவச சிறப்புப்பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்தப்படும் என தமிழக முதலமைச்சர் அவர்களால் 13.9.2021 அன்று சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை 2021-2022 ன்மீதான விவாதத்தின்போது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உரிய நிதி ஒப்பளிப்பு அரசு ஆணை எண். 565 உள் (காவல் 15) துறை நாள் 10.12.2021-ன் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி முதல் அணிக்கான 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த 14.03.2022 முதல் 14.06.2022 வரையிலான காலத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. இரண்டாவது அணிக்கான 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பு இவ்வாண்டில் பிப்ரவரி-2023 மாத பிற்பகுதியில் துவக்கப்படவுள்ளது.
அதன்படி கடலோர பாதுகாப்பு குழுமத்தால் நடத்தப்படவுள்ள 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்துக்கொள்ள தகுதியுள்ள மீனவர் வாரிசுகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்படி விண்ணப்ப படிவங்களை சம்மந்தப்பட்ட கடலோர மாவட்ட மீன்வளத்துறை அலுவலகங்களிலிருந்தும், மேலும் மீனவ அலுவலகங்களிலிருந்தும், கடலோர பாதுகாப்பு குழும் ஆய்வாளர் நியாயவிலைக் கடைகள் கிராம கூட்டுறவு சங்கங்கள், ஆகிய இடங்களிலிருந்தும் இலவசமாக பெற்றுக்கொள்ளவும்
மேலும் https://drive.google.com/drive/folders/1I8xcdsoXM9RH-O--ySMT2wJCoEXtWskh என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேற்படி பயிற்சி வகுப்புகள் 2023 பிப்ரவரி மாத பிற்பகுதியில் தொடங்கி தொடர்ந்து மூன்று மாத காலத்திற்கு கடலுார், இராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இலவசமாக வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடலோர மாவட்டங்களிலிருந்து தேர்வு செய்யப்படும் நபர்கள் அருகாமையிலுள்ள பயிற்சி மையத்திற்கு அனுப்பப்படுவர். தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சி கையேடுகள் இலவசமாக வழங்கப்படும். மேலும், பயிற்சியாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு மாதம் தலா ரூபாய் ஆயிரம் வீதம், பயிற்சிக்கால ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.
எனவே, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் மொத்த பாடங்களின் கூட்டுத்தொகையில் 50 சதவிகிதத்திற்கு மேலும், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக் 50 சதவிகிதத்திற்கு மேலும் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள, உரிய உடற்கூறு தகுதிகளும் பெற்றுள்ள மீனவர் வாரிசுகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
++++++++++++++++++++++++
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் உள்ளூர் செய்திகள் முதல் உலகம் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் டூட்டி விஷன் நியூஸ் (www.tutyvision.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Whatsapp Group: Click Here...
Telegram Group: Click Here...