தமிழ் கல்ட்சுரல் மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் யோகாசன போட்டி!
தமிழ் கல்ட்சுரல் மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் யோகாசன போட்டி!

தமிழ் கல்ட்சுரல் மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் 8ம் ஆண்டு மாநில அளவிலான 8ம் ஆண்டு மாநில அளவிலான யோகாசனப் போட்டி நடைப்பெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி SSDM கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் கல்ட்சுரல் மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் 8ம் ஆண்டு மாநில அளவிலான யோகாசனப் போட்டி நடைப் பெற்றது.
தமிழ்நாடு யோகா விளையாட்டு வளாச்சி கழக பொதுசெயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். தமிழ் கல்ட்சுரல் மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் தலைவர் அழகுதுரை, துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ் கல்ட்சுரல் மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் செயலாளர் சங்கர் வரவேற்புரையாற்றினர்.
மாநில அளவிலான போட்டியில் LKG முதல் கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 1100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்
இப்போட்டியில் சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு,மற்றும் SSDM கலை அறிவியல் கல்லூரி செயலாளர் கண்ணன் ஆகியோர்
கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற பள்ளிமாணவ மாணவிகள் பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார். அகிலாண்டபுரம் மகாலட்சுமி நடுநிலைப்பள்ளி, மம்சாபுரம் சிவந்திபட்டி நாடார் பள்ளி, கயத்தார் மதர்தெரசா மெட்ரிக் பள்ளிகள் முதல் பரிசுகள் பெற்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் வெங்கடசாமி மெட்ரிக் பள்ளி,விஜய கரிசல் குளம் மகாத்மா காந்தி நர்சரி பள்ளி,கோவில்பட்டி லட்சுமி மில் மெட்ரிக் பள்ளிகள் இரண்டாவது பரிசுகள் பெற்றனர்.
கோவில்பட்டி கரிதா பப்ளிக் பள்ளி,சாத்தூர் பாரத் நர்சரி பள்ளி,புதியம்புத்தூர் HNUPநர்சரி பள்ளிகள் மூன்றாவது பரிசுகள் பெற்றனர்.
பெரம்பலூர் பாரத் FIRST பள்ளி,ஸ்ரீவில்லிபுத்தூர் சேஷா பள்ளி, சாத்தூர் FIST STEPS பள்ளி,மந்தித்தோப்பு செண்பக ராஜன் நினைவு துவக்கப்பள்ளி,கழுகுமலை விமல் மெட்ரிக் பள்ளி,சாத்தூர் KCADமெட்ரிக் பள்ளி,கோவில்பட்டி டிவிங்கள் ஸ்டார் பள்ளி,மேலப்பாளையம் ரோஸ் நர்சரி பள்ளி,கோவில்பட்டி TCSJ தமிழ் சென்டர், சாத்தூர் ஆர்ட்டிக்கிட்ஸ் பள்ளி இப்பள்ளிகள் சிறப்பு பாதிகள் பெற்றனர்கள். இதனைதொடர்ந்து
சூரிய நாராயணன், சோலை நாராயணன், சந்தனராஜ், ரஜேஷ், ஐயப்பன், கார்த்திக் ராஜா, லட்சுமணன், பேனகா,கற்பகவள்ளி, சண்முக லட்சுமி, புஷ்பரதி,மாரியம்மாள்,ஈஸ்வரி,குருலட்சுமி, ஆனந்த்,தாமோதரன். ஆகியோர் வாழ்த்துரையாற்றினார். பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டுள்ளனர் .
தமிழ் கல்ட்சுரல் மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் பொருளாளர் சிவசக்திவேல்முருகன் நன்றியுரையாற்றினர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நிருபர் S.முத்துக்குமார்