மோட்டார் பைக்கில் சென்றவர் விபத்தில் பரிதாப பலி!
புதுக்கோட்டை அருகே மோட்டார் பைக்கில் சென்றவர் தடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை அருகே மோட்டார் பைக்கில் சென்றவர் தடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் புத்துக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி கிராமத்தில் வசிப்பவர் வேல்மயில். இவரது மகன் செல்வகுமார் (51) இவர் தனது மோட்டார் பைக்கில் ஆறுமுகமங்கலம் கிராமத்தில் இருந்து செல்வநாயகிபுரத்திற்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலை தருமாறு கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஏரல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மேரி ஜெமீதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.