விளாத்திகுளம் அருகே கோர விபத்து: இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் பலி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சுற்றுலா வேன் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளாத்திகுளம் அருகே கோர விபத்து: இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் பலி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே இன்று ஏற்பட்ட கோர சாலை விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்லாகுளம் கிராமத்தை சேர்ந்த குருசாமி (40), முத்துலட்சுமி (48), முகில் (5), சுமித்ரன் (3) மற்றும் அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் குளத்தூரிலிருந்து பல்லாகுளம் நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, சாயல்குடியிலிருந்து தூத்துக்குடி நோக்கி வந்த சுற்றுலா வேன் வைப்பார் அருகே எதிரே வந்த இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த குளத்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய சுற்றுலா வேன் ஓட்டுநரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கோர விபத்து அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.