பெரியப்பாவை குத்திக் கொன்ற வாலிபர் கைது : தூத்துக்குடி அருகே பயங்கரம்!
தூத்துக்குடி அருகே ஆடு மேய்க்கும் தகராறில் பெரியப்பாவை குத்திக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகே ஆடு மேய்க்கும் தகராறில் பெரியப்பாவை குத்திக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அருகே உள்ள ராமநாதபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம் மகன் நம்பி கோனார் (70). இவரது தம்பி கணபதியின் மகன் சங்கிலி மாடன் (30) இருவரும் ஆடுகளை மேய்க்கும் தொழிலாளிகள். இன்று புதுக்கோட்டை அருகே உள்ள செட்டிமல்லன்பட்டி கிராமம் காட்டுப் பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்.
இந்நிலையில், மாலை 5 மணி அளவில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சங்கிலி மாடன், தனது பெரியப்பா நம்பியை சராமாரியாக கத்தியால் குத்தினாராம். பின்னர் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதில் நம்பி கோனார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், கொலை செய்யப்பட்டு கிடந்த நம்பி கோனார் சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து காட்டுப் பகுதியில் மறைந்திருந்த சங்கிலி மாடனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவ இடத்தை தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுரேஷ் பார்வையிட்டார். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் வரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.