17 கோடி ரூபாய் மோசடி வழக்கில் தூத்துக்குடி முன்னாள் அமைச்சரின் மகன் மலேசியா தப்ப முயன்ற போது போலீசாரால் அதிரடி கைது..!

17 கோடி ரூபாய் மோசடி வழக்கில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகனும், தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலருமான ராஜா கைது மலேசியாவுக்கு தப்ப முயன்ற போது சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

17 கோடி ரூபாய் மோசடி வழக்கில் தூத்துக்குடி முன்னாள் அமைச்சரின் மகன் மலேசியா தப்ப முயன்ற போது போலீசாரால் அதிரடி கைது..!

தூத்துக்குடியை சேர்ந்த முன்னாள் அமைச்சரின் மகன் சென்னை ஏர்போர்ட் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாநகராட்சியின் 59-வது வார்டு கவுன்சிலராக முன்னாள் அமைச்சர் SP சண்சண்முகநாதனின் மகன் ராஜா உள்ளார். இவர் கல்குவாரியில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என கூறி அவரது சகோதரியிடம் 300 சவரன் நகையை வாங்கியதாகவும், நகை விற்ற பணத்தில் தூத்துக்குடியில் 40 ஏக்கர் நிலம் வாங்கியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் மலேசியாவுக்கு தப்ப முயன்ற ராஜாவை  போலீசார் சற்றுமுன் கைது செய்தனர்.

முன்னாள் அமைச்சரின் மகன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்ட அதிமுக கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.