திருச்செந்தூர் அருகே கஞ்சா வழக்கில் வாலிபர் கைது: 1½ கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்!!
திருச்செந்தூர் அருகே கஞ்சா வழக்கில் வாலிபர் கைது: 1½ கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்!!
காயல்பட்டினத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு மேற்பார்வையில் ஆய்வாளர் ஜூடி தலைமையில் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது காயல்பட்டினம் நகராட்சி அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர் காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவை சேர்ந்த ராமர் மகன் பிரேம்குமார் (35) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் பிரேம்குமாரை கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.