காவல் நிலையத்தில் ஆட்சியர் செந்தில்ராஜ் திடீர் ஆய்வு!!
காவல் நிலையத்தில் ஆட்சியர் செந்தில்ராஜ் திடீர் ஆய்வு!!

நாலாட்டின்புத்தூர் காவல் நிலையத்தில் ஆட்சியர் செந்தில்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேற்று நாலாட்டின்புத்தூரில் உள்ள காவல் காவல் நிலையத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள கோப்புகள் மற்றும் ஆவணங்களை அவர் பார்வையிட்டார். மேலும் காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணியில் இருந்து போலீஸ் அதிகாரிகளிடம் அவர் குறைகள் கேட்டார். இதில் கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ், நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.