நாசரேத் அருகே தந்தை இறப்பு துயரம் – 27 வயது இளைஞர் தற்கொலை

நாசரேத் அருகே தந்தை இறப்பு துயரம் – 27 வயது இளைஞர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே தந்தை இறந்த துக்கத்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாசரேத் அடுத்துள்ள வெள்ளமடம், சுப்ரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசீர் கனகராஜ். இவரது மகன் ஜெயராஜ் (27). ஆசீர் கனகராஜ் சில மாதங்களுக்கு முன்பு காலமானார். தந்தை மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த ஜெயராஜ், அவரது மறைவால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் அவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். “தந்தை இல்லாத இந்த உலகில் நான் இருக்க விரும்பவில்லை” என்று தாயாரிடம் கூறிய அவர், வீட்டின் அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ஜெயராஜ் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நாசரேத் காவல்துறை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து  விசாரணை நடைபெற்று வருகிறது.