தூத்துக்குடி மாவட்டத்தில் 16 டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடப்படும்: டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் 16 டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 16 டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று கடந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதுதொடர்பான நடவடிக்கையை தமிழக அரசு இன்று மேற்கொண்டுள்ளது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி இதற்கான அறிவிப்பை சட்டசபையில் வெளியிட்டு இருந்தார். இதையடுத்து மூடப்பட வேண்டிய மதுக்கடைகள் பற்றிய கணக்கெடுப்பு நடைபெற்றது.
கோவில்கள் மற்றும் பள்ளிக்கூடங்களின் அருகில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு மதுக்கடைகள் கணக்கெடுக்கப்பட்டன. இதன்படி நாளை (22-ந்தேதி) முதல் தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன. இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் 500 டாஸ்மாக் கடைகள் நாளை முதல் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நடைபெறும் உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தெரிந்து கொள்ள... எங்களது ஆண்டராய்ட் ஆப் டவுன்லோட் செய்யுங்கள்... CLICK HERE..
அதன் படி தூத்துக்குடி மாவட்டத்தில் மூடப்படும் டாஸ்மாக் கடைகள் பட்டியல் பின்வருமாறு