தூத்துக்குடியில் பரிதாபம்: மது பழக்கத்தை தாய் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை!

தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே மது பழக்கத்தை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடியில் பரிதாபம்: மது பழக்கத்தை தாய் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை!

தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே மது பழக்கத்தை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி தாளமுத்து நகர், ராமதாஸ் நகரைச் சேர்ந்தவர் ராஜா மகன் பார்த்திபன் (23) சங்குகுளி தொழிலாளி. இவர் கடந்த மூன்று மாதங்களாக அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம். இதனை அவரது தாயார்  கனகராணி கண்டித்துள்ளார்.  இதனால் மனமுடைந்த பார்த்திபன் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.