தேவர் ஜெயந்தி விழா: 3வது மைலில் அவரது திருவுருவ சிலைக்கு 116 பால் குடம் அபிஷேகம் செய்து மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி தேவர் திருமகனாரின் 116 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு 3வது மைல் அருகே உள்ள தேவர் திருமகனாரின் திருவுருவ சிலைக்கு தேவர் மகாசபை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதேபோல் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் பெண்கள் 116 பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து பாலாபிஷேகம் செய்தனர்.

தேவர் திருமகனாரின் 116 ஆவது ஜெயந்தி விழா இன்று தமிழக முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது தூத்துக்குடியில் மூணாவது மைல் பகுதியில் அமைந்துள்ள தேவர் திருமகனார் சிலைக்கு தேவர் மகா சபை மற்றும் பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து அகில இந்திய பார்வர்ட் பிளாக் சார்பில் திரு வி க நகர், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் 116 பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து தேவர் திருமகனார் திருவுருவ சிலைக்கு பாலாபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.